கரூர், நவ. 13: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க பேரணி நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த கோரிக்கை முழக்க பேரணிக்கு துணைத்தலைவர் வையாபுரி தலைமை வகித்தார். நிர்வாகிகள் தங்கராசு, ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தனர். எழில்வாணன் துவக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் அன்பு உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த முழக்க பேரணியில் கலந்து கொண்டனர். கோரிக்கை குறித்து மேலை பழனியப்பன் கலந்து கொண்டு பேசினார். நிறைவாக இணைச் செயலாளர் திருமூர்த்தி நன்றி கூறினார்.
செம்மொழி தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும், திருக்குறறை தேசிய நூலக அறிவிக்க சட்டம் திருத்தம் கொண்டு வர வேண்டும், உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பின் சார்பில் தலைமை தபால் நிலையத்தில் இருந்து கரூர் பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்க கோரி உலகத் திருக்குறள் கூட்டமைப்பு கோரிக்கை முழக்க பேரணி appeared first on Dinakaran.