கடந்த 7ம் தேதி மும்பையின் பந்த்ரா காவல்நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், “நான் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவன். நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன் இருக்கிறேன். ரூ.50 லட்சம் தராவிட்டால் ஷாருக்கானை கொலை செய்து விடுவேன்” என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதுகுறித்து மும்பை காவல்துறையினர், சைபர் குற்றப்பிரிவினருடன் இணைந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பைசன் கான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் பைசன் கானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் நேற்று சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூருக்கு சென்ற காவல்துறையினர் வழக்கறிஞர் பைசன் கானை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். ஆனால் “ஷாருக்கானுக்கு நான் மிரட்டல் விடவில்லை. என் மொபைல் போன் தொலைந்து விட்டது. அதுபற்றி கடந்த 2-ம் தேதி கமர்திஹ் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளேன்” என காவல்துறையினரிடம் பைசல் கான் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரூ.50 லட்சம் கேட்டு நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது appeared first on Dinakaran.