இதுபற்றி தகவலறிந்த மாணவிகளின் பெற்றோரும், உறவினர்களும் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது உடற்கல்வி ஆசிரியர், பள்ளி செயலாளர், பள்ளி முதல்வர் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தினர். இதையடுத்து உடற்கல்வி ஆசிரியரை தனிப்படையினர் கோவையில் கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கின் குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்ததாக பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்டி (44), செயலாளர் செய்யது அகமது (61) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
உடற்கல்வி ஆசிரியருக்கு சில தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் அடைக்கலம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களிடமும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். தூத்துக்குடி விடுதியில் தங்கியிருந்த போது உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்குடன் நண்பர் ஒருவரும் தங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் யார் என போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே பள்ளிக்கு நேற்று (12ம் தேதி) முதல் வரும் 17ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டு உள்ளது. கைதான பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்டி, செயலாளர் செய்யது அகமதுவிடம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்த போது அடுத்தடுத்து நெஞ்சுவலிப்பதாக கூறியதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
The post மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை பள்ளி முதல்வர், செயலர் கைது appeared first on Dinakaran.