வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ₹20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்ஐ கைது

*நிஜாமாபாத் மாவட்டத்தில் பரபரப்பு

திருமலை : தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் வர்ணி மண்டலம் கோட்டய்யா பாளையத்தைச் சேர்ந்த விவசாயி நாகராஜு. இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒருவருடன் சண்டையிட்டார்.

இந்த சண்டை விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் இருவரும் பரஸ்பரம் புகார் அளித்து கொண்டனர். இந்த வழக்கில் எஸ்.ஐ. கிருஷ்ணகுமார் நாகராஜூ மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

சிறு தகராறிற்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாது என எஸ்.ஐ.யிடம் பேரம் பேசியுள்ளார். முடிவில், எஸ்.ஐ. கிருஷ்ணகுமாருக்கும், பாதிக்கப்பட்ட நாகராஜுக்கும் இடையே நடந்த பேச்சில் ரூ.20 ஆயிரத்திற்கு வழங்க ஒப்பு கொண்டார். ஆனால் எந்த தவறும் செய்யாமல் எஸ்ஐக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வழங்க மனம் விரும்பவில்லை.

இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்கத் திட்டமிட்டார். இதற்காக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து நாகராஜூவிடம் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் வழங்கி அனுப்பினர். அந்த பணத்தை எஸ்.ஐ கிருஷ்ணகுமாரிடம் நேற்றுமுன்தினம் கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சேகர் ரெட்டி அதிகாரிகளுடன் சென்று சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்ஐயை லஞச் ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ₹20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்ஐ கைது appeared first on Dinakaran.

Related Stories: