உடல், மனதை சிதைக்கும் போதை வஸ்துக்களை தவிர்த்து கவனத்துடன் கல்வி கற்க வேண்டும்

மன்னார்குடி, நவ. 12: உடல், மனதை சிதைக்கும் போதை வஸ்துக்களை தவிர்த்து கவனத்துடன் கல்வி கற்கவேண்டுமென மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுரை வழங்கினார். திருவாரூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், மன்னார்குடி டிஎஸ்பி அஸ்வத்ஆன் டோ ஆரோக்கியராஜ் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் பரவாக்கோட்டை காவல் நிலையம் சார்பில் போதை பொருட்களின் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மகாதேவப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. உதவி தலைமை ஆசிரியை அபிராமி, எஸ்ஐ பிரேம் ஆனந்த், எஸ்எஸ்ஐ அசோகன் முன்னிலை வகித்தனர். முன்னதாக தலைமை காவலர் செல்வ கணபதி வரவேற்றார்.

இதில், பரவாக்கோட்டை இன்ஸ்பெக்டர் சசிகலா கலந்து கொண்டு பேசுகையில், போதை வஸ்துகளின் பயன்பாடு உடல், மனம் இரண்டையும் சிதைப்பதுடன் சமூகத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கிறது. இதற்கு அடிமையாகும் மாணவன் முதலில் தனது அறிவை இழக்கிறான். அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற ஆவலில் மாணவர்கள் போதை வஸ்துகளை உபயோகப்படுத்துவதன் மூலம் தனது அழிவிற்கு அவனே காரணமாகிறான். எனவே, இதுபோன்ற தீய பழக்கங்கள் பக்கம் மாணவர்கள் தங்கள் கவனத்தை திசை திருப்பா மல் மிகுந்த கவனத்துடன் கல்வி கற்று வாழ்வில் சாதனை படைக்க வேண்டும். மாணவ, மாணவிகள் தங்கள் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் அறிவிப்பு மற்றும் குறுஞ்செய்திகளை நம்பக்கூடாது. மாணவிகள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் முகப்பு படங்களாக வைக்கக்கூடாது.

தொழில் நுட்பங்கள் வளர வளர சமூகத்தில் குற்றங்கள் அதிகமாகிறது. தகவல் தொழில் நுட்பத்தை மிக மிக கவனமாக கையாளும் போது அதன் மூலம் வருகிற தீமைகளை நாம் விழிப்புடன் இருந்து தடுக்கலாம் என்றார். நிறைவில், தலைமை காவலர் வினோத் நன்றி கூறினார்.

The post உடல், மனதை சிதைக்கும் போதை வஸ்துக்களை தவிர்த்து கவனத்துடன் கல்வி கற்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: