திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சாரு வழங்கினார்

திருவாரூர், நவ.12: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாரு வழங்கினார்.
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகள பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் சாரு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, கல்விக்கடன், வங்கிக்கடன், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 273 மனுக்களை அளித்தனர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாரு. அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி பொதுமக்களின் கோரிக்கைகளை உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகையாக ரூ. 3 லட்சத்து 46 ஆயிரத்து 721 மதிப்பிலான வங்கி வரைவோலையினை பயனாளிகளிடம் வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ சண்முகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சாரு வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: