×

மது கொடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பி.டி. மாஸ்டர் கைது

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி கிறிஸ்தியா நகரத்தைச் சேர்ந்த பொன்சிங் (42) உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடியில் நடந்த விளையாட்டுப் போட்டிக்கு மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளார். இரவில் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது மாணவிகளுக்கு மதுபானம் மற்றும் பீர் வகைகளை மிரட்டி கொடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஊர் திரும்பியதும் இதுபற்றி மாணவிகளின் பெற்றோர், உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆசிரியர் பொன்சிங் தலைமறைவானார். அவரை கைது செய்யும்படி பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் கோவையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

The post மது கொடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பி.டி. மாஸ்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Onankudi ,Onankudi Chistia ,Thoothukudi ,Tuticorin ,
× RELATED தூத்துக்குடி விமான நிலையத்தில்...