பெரம்பூர்: எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்கப்படுவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் பென்சாமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம், முல்லை நகர் சுடுகாடு அருகே கஞ்சா விற்றபனையில் ஈடுபட்ட வியாசர்பாடி உதயசூரியன் நகர் 13வது பிளாக் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (27) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தி இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இவர் மீது 13 குற்ற வழக்குகள் இருப்பதும், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடி பிரிவில் இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post கஞ்சா விற்ற ரவுடி கைது appeared first on Dinakaran.