×

மருந்து ஆலைக்கு நிலம் ஆர்ஜிதம்: கலெக்டர் தாக்கிய கிராம மக்கள்

திருமலை: தெலங்கானா மாநிலம் விரகாபாத் மாவட்டம் துத்யாலா மண்டலம் லகாச்சார் கிராமத்தில் பார்மா நிறுவனம் அமைக்க நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி நடந்து வருகிறது. இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க கலெக்டர் பிரதீக் ஜெயின் மற்றும் அதிகாரிகள் நேற்று சென்றனர். கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் கிராமத்திற்கு வந்ததும் விவசாயிகள் கற்கள் மற்றும் கட்டைகளால் வாகனத்தை சேதப்படுத்தினர். இந்த கல்வீச்சில் 3 வாகனங்கள் சேதமடைந்தன. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை கிராம மக்கள் தாக்கினர். இதனால், பதற்றமான சூழல் நிலவியது.

The post மருந்து ஆலைக்கு நிலம் ஆர்ஜிதம்: கலெக்டர் தாக்கிய கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Lakachar ,Tudyala mandal, Virakabad district, Telangana ,Collector ,Prateek Jain ,Dinakaran ,
× RELATED ஒரேநாளில் அதிக `பாலோயர்ஸ்’ ஆசைக்காக...