×

பள்ளிக்கு செல்லவிடாமல் மாணவர்களுக்கு தொந்தரவு

சேலம், நவ. 12: சேலம் அருகே பள்ளிக்கு செல்லவிடாமல் தொந்தரவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் புகார் அளித்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த கோனேரிப்பட்டியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகள் நிலா(17) மற்றும் மகன் நிதிஷ் ஆகியோர் நேற்று பள்ளி சீருடையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘எங்கள் குடும்பத்திற்கும், அருகில் உள்ள ஒரு குடும்பத்தினருக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவர்கள் எனது தந்தையை வெட்டி காயப்படுத்தினர். நாங்கள் இருவரும் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருகிறோம். தற்போது அந்த குடும்பத்தினர், பள்ளிக்கு சென்று வரும் போது பல்வேறு வகைகளில் தொந்தரவு அளிக்கின்றனர். இதனால், பள்ளிக்கு செல்ல முடியாததுடன், உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தம்மம்பட்டி போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி பாதுகாப்பு வழங்க வேண்டும்,’’ என்றனர்.

The post பள்ளிக்கு செல்லவிடாமல் மாணவர்களுக்கு தொந்தரவு appeared first on Dinakaran.

Tags : Salem ,Parthasarathy ,Koneripatti ,Kengavalli ,Nila ,
× RELATED மெடிக்கலில் செல்போன் திருடிய பெண் கைது