×

ஆர்ப்பாட்டம்

சேலம், டிச. 31: மாற்றுத்திறனாளி விடுதலை முன்னணி மற்றும் பத்து ரூபாய் இயக்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பத்து ரூபாய் இயக்க மாவட்ட தலைவர் அழகு தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளி விடுதலை முன்னணி பொது செயலாளர் மோகன்,மாநில பொது செயலாளர் விஸ்வராஜூ ஆகியோர் பேசினார். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மதிக்காத தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சதீஷ்குமார், முனுசாமி, பூபதி, திருமுருகன், சீனிவாசன், சுதாகர், சிவகுமார், ராமு, சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Fort Ground ,Disabled Liberation Front ,Ten Rupee Movement ,Ten Rupee Movement District ,President ,Azhughu ,Disabled Liberation… ,Dinakaran ,
× RELATED திருடிய காரை சேலத்தில் விட்டுச்சென்ற மர்மநபர்கள்