- முதன்மை சுகாதார மையம்
- பச்சைமலை
- Dhammampatti
- தம்மம்பட்டி, சேலம்
- சேலம்-திருச்சி மாவட்டம்
- வெங்கமுடி
- சின்னப்பகலம்
- பெரியப்பாக்களம்
- ஓடைக்காட்டுபுதூர்
- தின மலர்
தம்மம்பட்டி, டிச.30: சேலம் தம்மம்பட்டி அருகே பச்சமலை கிராமத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்களா? என்பது மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. சேலம்-திருச்சி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது பச்சமலை கிராமம். இங்கு வெங்கமுடி, சின்னபக்களம், பெரியபக்களம், ஓடைக்காட்டு புதூர், சின்னமங்கலம், பெரியமங்கலம், வேப்பாடி என்று 33கிராமங்கள் உள்ளன. இதில் 24கிராமங்கள் மலையின் மேல்பகுதியில் உள்ளது. 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பச்சமலை ஊராட்சியில் போக்குவரத்து, சுகாதாரம், பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என்பது தற்போது வரை நிறைவு ெபறாத நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தும் முழுமையான செயல்பாட்டில் இல்லை. குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து பச்சமலை கிராம மக்கள் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:
பச்சமலை ஊராட்சியின் பெரும்பகுதி வனப்பகுதியாக உள்ளது. இதனால் இங்கு சாலை வசதிகள் என்பது நிறைவேறாத ஒன்றாகவே உள்ளது. இது ஒருபுறமிருக்க, இதர வசதிகளுக்கும் மக்கள் திண்டாட வேண்டிய நிலையே உள்ளது. குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தும், உரியநேரத்தில் சிகிச்சை பெற முடியாத நிலை நீடித்து வருகிறது. வனங்கள் நிறைந்த மலைப்பகுதி என்பதால், விஷ ஜந்துக்களின் தொல்லை இங்கு அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியமங்கலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மனைவியான மணி என்பவரை பாம்பு கடித்தது.
அவருக்கு கிராம மக்கள் முதலுதவி அளித்து பெரியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு செவிலியர் மட்டுமே இருந்தார். டாக்டர் இல்லாததால் உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை. இரவுநேரம் என்பதால் வேறு இடத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்கான வாகன வசதியும் இல்லை. ஆபத்தான நிலையில் உறவினர்கள் சிலர், பைக்கில் அவரை அமரவைத்து 30கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தம்மம்பட்டிக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மிகவும் சிரமப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஆத்தூருக்கு அழைத்துச் சென்றனர்.
இப்படி பாதிக்கப்பட்டவரை பலமணி நேரம் பைக்கிலேயே அமர வைத்து, சிகிச்சைக்கு அழைத்துச் சென்றது ெபரும் பதற்றமாகவும் இருந்தது. பாம்புகடி போன்ற நிகழ்வுகளுக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் அந்த பெண்ணுக்கு பலமணி நேரம் கழித்தே சிகிச்சை கிடைத்தது. இன்னும் சற்று நேரம் தாமதம் செய்திருந்தால், அவரது நிலை விபரீதமாகி இருக்கும். பச்சைமலை ஊராட்சியில் இருந்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் அல்லது திருச்சி மாவட்டம் துறையூருக்கு தான் செல்லவேண்டும். போதிய பாதை வசதி இல்லாததால் கரடு,முரடான மலைப்பாதைகளில் 90கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். இது ஆபத்தான ேநரங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர் இருந்தால் ஆபத்தான பயணம் செய்ய தேவையில்லை. பதற்றமும் ஏற்படாது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கும். இதை உணர்ந்து அதிகாரிகள் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தரமாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று உயரதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ெதாடரும் அசம்பாவிதங்களை கட்டுப்படுத்த, முதலில் தற்காலிக மருத்துவர்களையாவது நியமிக்க வேண்டும். இது மலைகிராம மக்களுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.
இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
The post டாக்டர் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் உடனடி சிகிச்சை பெற முடியாமல்: பரிதவிக்கும் பச்சமலைகிராம மக்கள் appeared first on Dinakaran.