- ஜெயா பொறியியல் கல்லூரி
- திருவள்ளூர்
- எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறை
- திருநென்னாவூர்
- பேராசிரியர்
- ஏ.கனகராஜ்
- ஜெயா கல்விக் குழு
- துணை ஜனாதிபதி
- கே. நவராஜ்
- இணை செயலாளர்
- கே. தீனா
- தின மலர்
திருவள்ளூர்: திருநின்றவூர் ஜெயா பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறையால் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது. இதில், ஜெயா கல்வி குழுமத்தின் தலைவர் பேராசிரியர் அ.கனகராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கே.நவராஜ், இணை செயலாளர் கே.தீனா, முதல்வர் வி.சுரேஷ் குமார், இயக்குனர் எஸ்.சுயம்பழகன், கல்வி ஆராய்ச்சி தலைவர் எம்.சோமசுந்தரம், துணைத் தலைவர் ஏ.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறையின் 3ம் ஆண்டு மாணவி மயூரி அனைவரையும் வரவேற்றார். இந்த கருத்தரங்கை ஆவடி, பாதுகாப்புத் துறை இணை கட்டுப்பாளர் சந்தீப் பாஜ்பாய் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் பல தொழில்நுட்ப மற்றும் தகவல் தொடர்பு சார்ந்த திட்ட அறிக்கைகள் சமர்ப்பித்தல் திட்ட கண்காட்சி, சர்க்யூட் பிழைத்திருத்தம், தொழில்நுட்ப வினாடி வினா, புதிர்வேட்டை மற்றும் இதர விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
The post ஜெயா பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் appeared first on Dinakaran.