×
Saravana Stores

2021 சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு

சென்னை: 2021 சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட கே.சி.வீரமணி பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2021 ஏப்ரல், மே, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் கே.சி.வீரமணி மீது ராமமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். கே.சி.வீரமணி மீதான புகாரில் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். ராமமூர்த்தி அளித்த புகாரை விசாரித்து கே.சி.வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்வில் கே.சி.வீரமணி, பிரமாணப் பத்திரத்தில் சொத்துகளை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. கே.சி.வீரமணி தனது பிரமாணப் பத்திரத்தில் ஏராளமான சொத்துகளை மறைத்திருப்பதை கண்டுபிடித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post 2021 சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Former Minister ,K. C. ,Veeramani ,Chennai ,K. C. Veeramani ,K. ,Jolarbet ,Election Commission ,Dinakaran ,
× RELATED ஜார்கண்டில் மீண்டும் இந்தியா கூட்டணி...