×
Saravana Stores

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்- கோவை சாலையில் தேங்கிய மணல் துகள்கள்: வாகன ஓட்டிகள் அவதி

காரமடை: மேட்டுப்பாளையம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மணல் துகள்களால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, மருதூர், வெள்ளியங்காடு, தோலம்பாளையம், தேக்கம்பட்டி, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வந்தது. தற்போது மழை ஓய்ந்து உள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக அடித்து வரப்பட்ட மணல் மேட்டுப்பாளையம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இருபுறமும் சாலையோரங்களில் குவிந்து உள்ளன.

தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் மேட்டுப்பாளையம்- கோவை சாலையில் செல்லும் நிலையில் காற்றுக்கு மணல் துகள்கள் காற்றில் பறக்கின்றன. இவை வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோரின் கண்களில் விழுந்து சிரமமடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் தேங்கியுள்ள மணலால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் இருபுறமும் தேங்கியுள்ள மணலை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்- கோவை சாலையில் தேங்கிய மணல் துகள்கள்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : North East Monsoon ,Mettupalayam- Coimbatore road ,Karamadai ,Mettupalayam-Coimbatore National Highway ,Mettupalayam ,Marudur ,Velliangad ,Tholampalayam ,Thekampatti ,Sirumugai ,Northeast ,
× RELATED வடகிழக்கு பருவமழை துவங்கியதால்...