×
Saravana Stores

உடுமலை அரசு கல்லூரி விடுதி முன்பு குளம்போல் தேங்கிய மழைநீர்: மாணவ- மாணவிகள் அவதி

உடுமலை: உடுமலை அரசு கல்லூரி மாணவ மாணவியர் விடுதி முன் குளம் போல் மழை நீர் தேங்கி இருப்பதால் மாணவ மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை எளையமுத்தூர் பிரிவு பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதே போல அரசு கல்லூரி வளாகத்திற்குள் அரசு ஐடிஐ இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்குள் மாணவ மாணவிகள் தங்குவதற்கான விடுதிகள் உள்ளன. இவற்றில் ஏராளமான வெளி மாவட்ட மாணவ மாணவிகள் தங்கி இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பயின்று வருவதோடு, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி கல்லூரியில் படித்து வருகின்றனர்.

சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக மாணவர் விடுதி முன் மழைநீர் குளம்போல் தேங்கியது. 2 வாரத்திற்கு மேலாகியும் மழைநீர் அகற்றப்படாததால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் தேங்கிய மழை நீரால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மாணவ மாணவியர் விடுதி முன்பு தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் வைத்து உறிஞ்சி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி மற்றும் ஐடிஐ மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உடுமலை அரசு கல்லூரி விடுதி முன்பு குளம்போல் தேங்கிய மழைநீர்: மாணவ- மாணவிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Udumalai Government College Hostel ,Udumalai ,Udumalai Government College ,Government College of Arts and Sciences ,Udumalai Elayamuthur ,Tirupur ,Dinakaran ,
× RELATED குளம் போல தேங்கிய மழைநீர் கொசுக்கடியால் மாணவர்கள் அவதி