பியூட்டி பார்லரில் பாலியல் தொழில் நடத்திய இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் சிக்கினர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அடுத்த பெரிய செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை என்பவரது மகன் சதீஷ்குமார்(32). இவர் புலிப்பாக்கம் பகுதியில் ராகவன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள முதல் தளத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் பியூட்டி பார்லர் தொழில் செய்யப்போவதாக வீட்டு உரிமையாளரிடம் பொய் சொல்லி பெஸ்ட் யுனிசெக்ஸ் சலூன் மற்றும்ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து மசாஜ் மற்றும் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதாசிவம் தலைமையில் 10க்கும் மேற்ப்பட்ட போலீசார் மற்றும் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் போலீசாரும் நேற்று மாலை அந்த சலூனுக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு பாலியல் தொழில் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு சலூன் என்ற பெயரில் மசாஜ் மற்றும் பாலியல் தொழில் நடத்திய சதீஷ்குமார் என்பவரை கைது செய்தனர். இவருக்கு உறுதுணையாக இருந்த தொழில் பார்ட்னர் பூபாலன் என்பவரது மனைவி மாயா (எ) மகேஸ்வரியையும் (36) பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ப்ரீத்தி (24) என்ற இளம்பெண்ணையும் கைது செய்தனர். பின்னர் மகளிர் காவல்நிலையம் கொண்டு வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பியூட்டி பார்லரில் பாலியல் தொழில் நடத்திய இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: