×

இந்தியாவில் அசாதாரண தட்பவெப்பம் கடந்த 9 மாதத்தில் 3,238 பேர் உயிரிழப்பு: சுற்றுச்சூழலுக்கான மையம் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் அசாதாரண தட்பவெப்பத்துக்கு கடந்த 9 மாதங்களில் 3,200 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஜனவரி முதல் செப்டம்பர் வரை) 93 சதவீத நாள்கள் அதாவது மொத்தமுள்ள 274 நாள்களில், 255 நாள்கள் அசாதாரண தட்பவெப்ப நிலையை இந்தியா சந்தித்துள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் 2,35,862 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன; 3,238 பேர் உயிரிழந்தனர்.

92,457 கால்நடைகள் உயிரிழந்தன; 32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் முழுமையாக சேதமடைந்தன. அதே 2023ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 273 நாள்களில், 235 நாள்கள் அசாதாரண தட்பவெப்ப நிலையைச் சந்தித்தன. இதனால், 2,923 பேர் உயிரிழந்தனர்; 92,519 கால்நடைகள் உயிரிழந்தன; 80,293 வீடுகள் சேதமடைந்தன; 18.4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் அசாதாரண தட்பவெப்பம் கடந்த 9 மாதத்தில் 3,238 பேர் உயிரிழப்பு: சுற்றுச்சூழலுக்கான மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Center for Environment Information ,NEW DELHI ,Delhi ,Center for Science and Environment ,Dinakaran ,
× RELATED இரு தரப்பு ஒப்பந்தத்தின் படி அணுசக்தி...