சென்னை: சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் 2-வது சீசன் மாஸ்டர் பிரிவில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2வது சீசன் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் அரவிந்த் சிதம்பரம் சாம்பயின் பட்டம் வென்றார். பிளே ஆஃப் சுற்றில் தமிழ்நாட்டு வீரர் அர்ஜுன் எரிகேசியை வீழ்த்தி, டைபிரேக்கருக்கு அரோனியன் தகுதி பெற்றிருந்தார்.
இறுதி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் அரோனியனை வீழ்த்தி சாம்பியன் ஆனார். கடும் போட்டிக்கு இடையே அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.
போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அரவிந்த் சிதம்பரம்; சாம்பியன் ஆவேன் என எதிர்பார்க்கவில்லை. சென்னை செஸ் கிராண்ட்மாஸ்டர் தொடரில் கடும் போட்டிக்கு இடையே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. செஸ் கிராண்ட்மாஸ்டர் போட்டியை ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி என்று கூறினார்.
The post சென்னை செஸ் கிராண்ட்மாஸ்டர் போட்டியின் மாஸ்டர் பிரிவில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் appeared first on Dinakaran.