×

மருந்தாகும் பூண்டு!

நன்றி குங்குமம் டாக்டர்

பூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதை வழக்கமாக உட்கொண்டு வந்தால் பல நன்மைகளை அனுபவிக்க முடியும். அதே போல் நோய்த்தொற்றைத் தடுப்பதில் பூண்டு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

* வெள்ளைப்பூண்டையும், வெல்லத் தையும் சம அளவு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி தீரும்.

* பூண்டு, கருந்துளசி இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து சாறு பிழிந்து 5 மிலி சாறுடன் 1 சிட்டிகை வெங்காரப்பொடி கலந்து சாப்பிட்டு வந்தால் முதுகுத்தண்டு வலி குணமாகும்.

*பத்து மிளகுடன் இரண்டு பல் வெள்ளைப்பூண்டு, 1 சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து சிறிது நீருடன் கலந்து பருகி வந்தால், அஜீரணக் கோளாறு குணமாகும்.

* வெள்ளைப்பூண்டு பற்களை அம்மியில் வைத்து மை போல அரைத்து அதில் எலுமிச்சை பழச்சாற்றைக் கலந்து தலைக்குத் தேய்த்து ஊற வைத்து குளித்தால் பேன் தொல்லை ஒழியும்.

* இருபது வெள்ளைப்பூண்டு பற்களை வேக வைத்து அதோடு தேங்காய்ப்பூ சேர்த்து அரைத்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒருவேளை வீதம் கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால், வயிற்றுப்புண்கள் குணமாகும்.

* ஏழு நாட்கள் காலை வெறும் வயிற்றில் மூன்று புதிய கம்மாறு வெற்றிலையுடன், மூன்று பூண்டின் பருப்பை வைத்து நன்றாக மென்று சாப்பிட்டு பின் வெந்நீரும் அருந்தி வந்தால் ரத்த அழுத்த நோய் குணமாகும்.

* கை, கால்களில் சுளுக்கு ஏற்பட்டால் பூண்டுச்சாற்றைத் தடவி நீவி விட்டால் சுளுக்கு விரைவாக குணமாகும்.

* பசும்பாலில் பூண்டை வேக வைத்து, பூண்டை சாப்பிட்டுவிட்டு பாலைக் குடித்தால் வாயுக்கோளாறுகள் உடனே நீங்கும். மூச்சுத்திணறலும் நல்ல குணம் தெரியும்.

தொகுப்பு: ஆர்.கீதா, சென்னை.

The post மருந்தாகும் பூண்டு! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ?ஒருவருக்குச் செல்வம் சேரச்சேர...