×

நோய் அறிகுறிகளும் தீர்வும்!

நன்றி குங்குமம் டாக்டர்

நம் உடல் உறுப்புகளில் தென்படும் ஒருசில அறிகுறிகளை வைத்து நமக்கு எந்த நோயின் பாதிப்பு உள்ளது என்பதை தோராயமாக அறிந்து கொள்ளலாம்.கண்கள் உப்பி இருந்தால் சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக இல்லை என்று அர்த்தம். எனவே உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் அவை கண்களைச் சுற்றி தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்படுகிறது. இப்பிரச்னையை தடுக்க உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.

அதிகப்படியான வேலை, உடலில் மக்னீசியம் குறைவு போன்ற காரணத்தினால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. இப்பிரச்னையை போக்க போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தோலில் தடிப்புகள் இருந்தால் அது இருதய நோயாக இருக்கலாம். அதுவும் காதுகளுக்கு பக்கத்தில் தோல் தடித்து இருந்தால் அது உறுதியாக இருதய கோளாறு உள்ளது என்பதை உணர்த்துகிறது. மன அழுத்தம் குறைக்க வேண்டும். தியானம், யோகா பயிற்சி செய்ய மன இறுக்கம் குறைந்து, தோல் நோய்கள் குணமாகும்.

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருந்தால் நம் உடலில் உள்ள ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும். இதனைப் போக்க ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.

கல்லீரல் பாதிப்படையும் போது உடலில் உள்ள பித்தநீர் வெளியேற முடிவதில்லை. அதனால் தோல் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும். இதற்கு அதிகப்படியான ஆல்கஹால் உடலில் சேராமல் இருக்க வேண்டும். குடிப்பழக்கத்தை கை விட வேண்டும்.

பாதம் உணர்வில்லாமல் இருப்பது, மரத்துப் போவரது, அதிக தாகம், சோர்வு போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகள் ஆகும். இதற்கு ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைப்பது, கிரீன் டீ, பிளாக் டீ, அருந்துதல் போன்றவற்றை கடைபிடிக்கலாம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

தைராய்டு பிரச்னையாக இருந்தால் பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் தோன்றும். தைராய்டு சுரப்பி தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இது சரியான வேலை செய்யாதபோது பாதங்ளில் தோல் உலர்ந்து போகும். முடி உதிர்தல், எடை அதிகரிப்பு இருக்கும். மருத்துவ ஆலோசனை மேற்கொண்டு சரி செய்ய வேண்டும்.

உள்ளங்கை சிவந்து இருந்தால் அது கல்லீரல் பிரச்னையாக இருக்கும். ஏனெனில் நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் ரத்தத்திலுள்ள ஹார்மோன்களை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். அதனால் ரத்தத்தின் நிறம் அதிக சிவப்பாக இருக்கும். கீழாநெல்லியை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள நல்ல குணம் கிடைக்கும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

The post நோய் அறிகுறிகளும் தீர்வும்! appeared first on Dinakaran.

Tags : Kumkumam ,Dinakaran ,
× RELATED கிச்சன் டிப்ஸ்