×

கஸ்தூரிக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கண்டனம்..!!

சென்னை: அரசு ஊழியர்கள் குறித்து சர்ச்சையாக பேசிய நடிகை கஸ்தூரிக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களின் குறிப்பிட்ட பிரிவினர் லஞ்சம் பெறுவதாக பேசிய நடிகை கஸ்தூரிக்கு கண்டனம் எழுந்துள்ளது. சமூக நீதியை நெடுங்காலமாக கடைப்பிடித்து வரும் தமிழ்நாடு மக்கள் இதனை அனுமதிக்கமாட்டார்கள். அரசு ஊழியர்களை அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

The post கஸ்தூரிக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Revenue Officers Association ,Kasthuri ,Chennai ,Revenue Officers' Association ,Tamil Nadu ,
× RELATED அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்