×

திருமூர்த்திமலையில் கனமழையால் மலைவாழ் மக்கள் பாதிப்பு

உடுமலை, அக்.26: உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. பஞ்சலிங்க அருவியும் உள்ளது. தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இங்கு வருகின்றனர். விசேஷ தினங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அமணலிங்கேஸ்வரர் கோயில் பகுதியில் மழைவாழ் மக்கள் பலர் கடை வைத்துள்ளனர். நெல்லிக்காய்,மாங்காய், தேன் உள்ளிட்ட மலைகளில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் கோயில் பூஜைக்கு தேவையான பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருமூர்த்திமலையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் அதிக தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்கு வழிபாடு நடத்த மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். கனமழை காரணமாக மலைவாழ் மக்கள் கடை வைத்துள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அவர்கள் கடை நடத்த முடியவில்லை. சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாக உள்ளதால் அவர்கள் வியாபாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருமூர்த்திமலையில் கனமழையால் மலைவாழ் மக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirumurthimalai ,Udumalai ,Amanalingeswarar Temple ,Thirumurthimalai ,Panchalinga waterfall ,
× RELATED உடுமலை ரயில் நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு