×

தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு

உடுமலை, அக்.26: இந்திய தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் மாணவர்களுக்கான ஹேண்ட்பால் தேர்வானது சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றது.இதில் காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரிகார்த்திக் மாநில அணியில் தேர்வு பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதி பெற்றார்.

பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் விஜயன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் வெற்றி பெற்ற மாணவரை தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.

The post தேசிய ஹேண்ட்பால் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Sivaganga ,Indian National Schools Sports Group ,Karathozhu Government High School ,Harigarthik State Team ,Dinakaran ,
× RELATED பண்ணைக்குட்டைகள் அமைக்க வலியுறுத்தல்