×

தாராபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

 

தாராபுரம், அக்,29: தாராபுரம் எல்ஐசி கிளை முகவர்கள் சங்கம் சார்பாக எல்ஐசி கிளை அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கிளை தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய இன்சூரன்ஸ் முகவர் சங்கத்தின் கோரிக்கைகளான ஆயுள் காப்பீட்டு கழக முகவரின் கமிஷனை குறைக்கக்கூடாது. பாலிசியின் மீதான போனசை உயர்த்த வேண்டும். குறைந்தபட்ச காப்பீட்டை உயர்த்தக்கூடாது. பாலிசிதாரர் தனது பாலிசியின் மீது பெற்ற கடனுக்கான வட்டியை உயர்த்தாமல் குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் நாட்டுதுரை, பொருளாளர் செந்தில், ஆகியோர் முன்னிலை வகித்தனர், கோட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக பெருந்துறை கிளையை சேர்ந்த தென்மண்டல செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி மற்றும் காங்கயம் கிளையை சேர்ந்த கோவை கோட்ட இனை செயலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும், தாராபுரம் கிளையின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கோவை கோட்டத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 15 பெண் முகவர்கள் உட்பட மொத்தம் 65 பேர் கலந்து கொண்டனர்.

The post தாராபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : LIC ,Tarapura ,Tarapuram, Oc,29 ,Association of DAARAPURAM LIC Branch Agents ,Katriresan ,All India Association of Insurance Agents ,Darapura ,Dinakaran ,
× RELATED ‘எனக்கு சமமாக சேரில் அமர்ந்து டீ...