லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் என கூறி சல்மான் கானுக்கு மிரட்டல் உ.பி. ஆசாமி கைது

நொய்டா: கடந்த சில தினங்களுக்கு மும்பை காவல்துறையின் உதவி எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், நான் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர். எனக்கு உடனடியாக ரூ.10 கோடி பணம் வேண்டும். இந்த பணத்தை தர விட்டால் நடிகர் சல்மான் கான் கொல்லப்படுவார்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து மும்பை மற்றும் நொய்டா காவல்துறையினர் இணைந்து மிரட்டல் விடுத்தவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் என கூறி பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார். அவர், உ.பி மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்த அன்சாரி என தெரிய வந்துள்ளது. இதற்கிடையே ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான் கான் மற்றும் பாபா சித்திக்கின் மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக உ.பி நொய்டாவை சேர்ந்த முகமது தையாப்(20) என்பவரை கைது செய்துள்ளனர்.

 

The post லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் என கூறி சல்மான் கானுக்கு மிரட்டல் உ.பி. ஆசாமி கைது appeared first on Dinakaran.

Related Stories: