விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பயங்கரவாதம் பற்றி புத்தகம் எழுதிய நபர் கைது

நாக்பூர்: பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு கடந்த சில தினங்களாக தொடர் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கோண்டியா பகுதியை சேர்ந்த 35 வயது நபரை நாக்பூர் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, “விமான நிலையங்கள், மிகப்பெரிய தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் பயங்கரவாதம் என்ற புத்தகத்தை எழுதிய ஜகதீஷ் உய்கே என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு வேறொரு வழக்கில் கைதானவர். ஜகதீஷ் உய்கே, அரசு அலுவலகங்கள், பிரதமர் அலுவலகம், ரயில்வே அமைச்சகம், விமான சேவை நிறுவனங்கள், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, காவல்துறை தலைமை இயக்குநர், ரயில்வே பாதுகாப்பு படையினர் உள்பட பல்வேறு இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்” என்று தெரிவித்தனர்.

The post விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பயங்கரவாதம் பற்றி புத்தகம் எழுதிய நபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: