மும்பை: பிரபல இந்தி நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் போக்குவரத்து போலீசாரின் செல்போனுக்கு மர்மநபர் குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். ரூ.2 கோடி தராவிட்டால் சல்மான் கானின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார்.