தமிழ்நாடு பந்துவீச்சில் அஜித் ராம் 4, மணிமாறன் சித்தார்த் 3, முகமது, ஷங்கர், பிரதோஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு 2ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன் எடுத்திருந்தது. கேப்டன் நாராயண் ஜெகதீசன் 6, அஜித் ராம் 10 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். அஜித் 34 ரன்னில் வெளியேற, ஜெகதீசன் 49 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த பிரதோஷ் ரஞ்சன் பால் 8, பூபதி குமார் 13 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, தமிழ்நாடு 46.2 ஓவரில் 143 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது.
இந்த நிலையில் ஷாருக் கான் – ஆந்த்ரே சித்தார்த் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தது. ஷாருக் 50 ரன் (66 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஷுபம் அகர்வால் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆக… சோனு யாதவ் (1), முகமது (6), மணிமாறன் சித்தார்த் (0) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர். தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 259 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (77.2 ஓவர்).
ஆந்த்ரே சித்தார்த் 55 ரன்னுடன் (100 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். சத்தீஸ்கர் பந்துவீச்சில் ஷுபம் அகர்வால் 5, ஜிவேஷ் பட் 3, அஜய் மண்டல், ஆஷிஷ் சவுகான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 241 ரன் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்ற தமிழ்நாடு 2வது இன்னிங்சையும் தொடர்ந்து விளையாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.
சுரேஷ் லோகேஷ்வர் 6 ரன் எடுத்து அஜய் மண்டல் பந்துவீச்சில் அவுட்டானார். 3ம் நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்துள்ளது. கேப்டன் நாராயண் ஜெகதீசன் 28 ரன், ஆந்த்ரே சித்தார்த் 36 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 9 விக்கெட் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கவே இன்னும் 170 ரன் தேவை என்ற நெருக்கடியுடன் தமிழ்நாடு இன்று கடைசி நாள் சவாலை சந்திக்கிறது.
The post சத்தீஸ்கருடன் ரஞ்சி மோதல் பாலோ ஆன் பெற்றது தமிழ்நாடு: 2வது இன்னிங்சில் 71/1 appeared first on Dinakaran.