* ஐபிஎல் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட இன்றே கடைசி நாளாகும். சன்ரைசர்ஸ் அணியில் கிளாஸன், கம்மின்ஸ், அபிஷேக், ஹெட், நிதிஷ் குமார் ஆகியோர் தக்கவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் தென் ஆப்ரிக்காவின் காகிசோ ரபாடா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்தியாவின் பும்ரா, அஷ்வின் முறையே 3வது, 4வது இடங்களுக்கு பின்தங்கியுள்ளனர்.
* ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஒப்பந்தக் காலத்தை 2027ம் ஆண்டு இறுதி வரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா நீடித்துள்ளது.
* வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள லிவிங்ஸ்டோன் தலைமையிலான இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
* இலங்கையில் டிச. 12-22 வரை ஆண்கள் டி10 தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
* ஐஎஸ்எல் தொடரில் சென்னையின் எப்சி தனது 6வது லீக் ஆட்டத்தில் இன்று இரவு பஞ்சாப் எப்சி அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி டெல்லி நேரு அரங்கில் நடைபெறுகிறது. இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது (2 வெற்றி, 2 டிரா, 1 தோல்வி).
* ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி மீண்டும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோஹ்லியும் தனது விருப்பத்தை அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
The post சில்லிபாயின்ட் appeared first on Dinakaran.