தேனி, அக். 25: தேனி அல்லிநகரம், காந்திநகரை சேர்ந்த நல்லதம்பி மகன் சுரேஷ்(40). ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சமீப காலமாக இவருக்கு சரிவர டிரைவிங் வேலை கிடைக்காத நிலையில் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி ஷீலா ஆறுதல் கூறி வந்தாராம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுரேஷ் தனது வீட்டின் அருகே புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில், அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post டிரைவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.