×
Saravana Stores

தமிழ்நாட்டில் 2 லட்சம் டன் இ வேஸ்ட் குவிகிறது: மேலாண்மை திட்டமின்றி வீணாகும் எலக்ட்ரானிக்ஸ்

தமிழ்நாட்டில் செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர், டிவி, பிரிட்ஜ், ஏசி, ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பொருட்களின் மின்னணு இயக்கத்தில் ஏற்படும் ேகாளாறுகளை சரி செய்ய முடியாமல் கழிவுகளாக குவிப்பது வாடிக்கையாக இருக்கிறது. டிவி, மிக்சி, கிரைண்டர்களும் இயங்காத நிலையில் கழிவுகளாக குவிக்கப்பட்டு வருகிறது.

கோவை, மதுரை, திருச்சி, சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆண்டிற்கு சுமார் 2 லட்சம் டன் மின்னணு கழிவு பொருட்கள் குவிகிறது. ‘இ வேஸ்ட் ஸ்கிராப்’ ஆக சிலர், கழிவு மின்னணு சாதனங்களை அள்ளி செல்லும் நிலையிருக்கிறது. சிலர் பிளாஸ்டிக் குடம், பக்கெட் வாங்க பழுதான மின்னணு பொருட்களை எடை கணக்கில் போடுவது வாடிக்கையாக நடக்கிறது.

மக்கள் வேண்டாம் என தூக்கி போடும் பிரின்டட் சர்க்கியூட் போர்டு, கேதோடு ரே டியூப், மெர்குரி, காட்மியம், குரோமியம் ேபான்றவை டீலர்கள் மூலம் பெறப்பட்டு கப்பல், விமானம் மூலமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இவற்றை மறு உருவாக்கம் செய்து எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களாக தயாரித்து வெளிநாட்டு நிறுவனங்கள் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கிறது. மின்னணு கழிவு மேலாண்மை திட்டத்தில் எவ்வித பணிகளும் நடக்காததால் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை உச்சத்தை எட்டிவிட்டது.

பொதுமக்கள் புது மாடல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். புது மாடல் பொருட்களில் பழைய மாடல் பிரின்டட் சர்க்கியூ, கேதோடு ரே, காட்மியம், குரோமியம் போன்றவற்றை மேம்படுத்தி மீண்டும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். நீண்ட காலத்திற்கு பிறகு இந்த உண்மை தெரிந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறைக்கு கடந்த 2016 மார்ச் 26ம் தேதி ஒரு அரசாணை பிறப்பித்தது.

இ வேஸ்ட் மேனேஜ்மெண்ட் 2016 என்ற சட்ட பிரிவும் இதற்கென உருவாக்கப்பட்டது. அரசாணை வெளியாகி பல ஆண்டாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவற்றிற்கான போர்டு உள்ளிட்ட உதிரிபாகங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தயாராகிறது. இவை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களாக திரும்பி வருகிறது. இ வேஸ்ட் விவகாரம் மூடி மறைக்கப்பட்டதால் உள்நாட்டு உற்பத்தி குறைவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மின்னணு கழிவு தொடர்பாக ஆய்வு பணிகளை நடத்தியது.

லேப்டாப், பிரிண்டர், தட்டச்சு, டெலி ப்ராம்ப்டர், டெலிபோன் உபகரணங்கள், ஏசி, டிவி, பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் மூலமாக இ வேஸ்ட் குவிகிறது. இப்போதைய சீசனில் செல்போன், எல்இடி டிவி பழுதாகி இ வேஸ்ட்டாக அதிகமாக குவிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரித்தினர் கூறுகையில், ‘‘ரயில்வே, விமானப்படை, ராணுவம், தொலை தொடர்பு, பி.பி.ஓ, ஐ.டி நிறுவனங்கள், போக்குவரத்து, கம்ப்யூட்டர், செல்போன் நிறுவனங்கள் போன்றவற்றில் ஆய்வு நடத்தி பல்வேறு விவரங்கள் பெறப்பட்டது. ஸ்கிராப் டீலர்கள், மறு சுழற்சியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், பெரு சந்தை வியாபாரிகள் உள்ளிட்டோர்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் மின்னணு பொருட்களின் மறு சுழற்சி, அழிப்பு குறித்து விவரம் முழுமையாக கிடைக்கவில்லை. சீனா, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ‘சர்க்கியூட் போர்டு’ விவரங்கள் தெரியவில்லை’’ என்றனர்.

பேனல் போச்சு… எல்லாம் போச்சு…
செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர்கள் உருவாக்கத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவற்றிற்கு தேவையான பேட்டரி, போர்டு, உலோகங்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து செல்கிறது. இவற்றிற்காக ‘ஸ்கிராப்’ என்ற அளவில் தொகை வழங்கப்படுவதாக தெரிகிறது. டூப்ளிகேட் செல்போன், லேப்டாப்களும் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. இவற்றையும் இந்திய நிறுவனங்களின் பின்னணியில் வெளிநாட்டு நிறுவனங்களே தயாரித்து புழக்கத்தில் விடுவதாக கூறப்படுகிறது.

டிவி, செல்போன்களில் டிஸ்ப்ளே பேனல் முக்கியத்துவம் பெறுகிறது. இவை பழுதாகிவிட்டால் தூக்கி வீச வேண்டிய நிலைமை இருக்கிறது. செல்போன் மாடல்களில் எல்இடி டிவிக்கள் வந்துவிட்டது. 2 முதல் 3 ஆண்டு இயங்குவதே சவலாக மாறிவிட்டது. பேனல் பழுதாகிவிட்டால் இவற்றை கழிவாக நீக்கி விடுகின்றனர். பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டிவி, செல்போன்கள் பழுதானால் 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே விலை போவதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். எல்இடி டிவிக்களை பழைய இரும்பு வியாபாரிகள்தான் வாங்க முன் வரும் நிலைமையும் இருக்கிறது.

The post தமிழ்நாட்டில் 2 லட்சம் டன் இ வேஸ்ட் குவிகிறது: மேலாண்மை திட்டமின்றி வீணாகும் எலக்ட்ரானிக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ரேஷன் கடைகள் மூலம் வங்கி சேவைகளை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு..!!