தீபாவளி பண்டிகையையொட்டி 11 இடங்களில் கோபுரம் அமைத்து கண்காணிப்பு

 

திருப்பூர், அக்.19: திருப்பூர் மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் 11 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கடைவீதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வார இறுதி நாட்களில் பழைய, புதிய பேருந்து நிலையம், கோவில்வழி பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைவீதிகளில் அதிகப்படியான போலீசார் பாதுகாப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதே போல் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட உள்ளனர்.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவுப்படி மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் சட்டம் ஒழுங்கு போலீசார், குற்றப்பிரிவு போலீசார் போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை போலீசார், சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 500 போலீசார் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

The post தீபாவளி பண்டிகையையொட்டி 11 இடங்களில் கோபுரம் அமைத்து கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: