பல்லடம் தினசரி மார்க்கெட்டில் ஆர்ச் அமைக்க பூமி பூஜை

 

பல்லடம், அக்.18: பல்லடம் நகராட்சி கலைஞர் தினசரி மார்க்கெட்டில் ரூ.6.80 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் கற்கள் பதித்தல் மற்றும் ஆர்ச் அமைத்தல் பணி மேற்கொள்ள பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்து திட்டப்பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார், நகர பொருளாளர் குட்டி பழனிச்சாமி, பொறியாளர் சுகுமார், பணி மேற்பாளையாளர் ராசுகுட்டி, இளநிலைப்பொறியாளர் அப்புச்சாமி, சுகாதார ஆய்வாளர் சங்கர், நகராட்சி கவுன்சிலர்கள் வசந்தாமணி தங்கவேல், சபீனா ஜாகீர்உசேன், வார்டு திமுக செயலாளர்கள் மார்க்கெட் தங்கவேல், ஜாகீர் உசேன், வெள்ளியங்கிரி, தங்கராஜ், பொன்னுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பல்லடம் தினசரி மார்க்கெட்டில் ஆர்ச் அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: