சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய இந்திய திருநாட்டின் எழுச்சிக்கு விதையாக வித்தாக அமைந்த சுதந்திர போராட்ட தியாகிகள். அன்னை தமிழ் மொழியை காத்திட ஆரூயிர்கள் தந்து போராடிய அற்புத தியாகிகள் அனைவரையும் போற்றி பாராட்டும் பெருமைக்குரிய சின்னங்களாக சிலைகளையும், மணிமண்படங்களையும் தமிழ்நாட்டில் ஏராளமாக எழுப்பி வருகிறார்கள். அவற்றில் சில:
* கலைஞருக்கு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 2022 மே 28ம் தேதி ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் திருவுருவச்சிலை.
* சென்னை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் கடந்த 2022ம் ஆண்டு அக்.27ம் தேதி அம்பேத்கருக்கு திருவுருவச் சிலை.
* உத்தரப்பிரதேச மாநிலம், காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு நினைவில்லமாக்கப்பட்டு அங்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2022ம் ஆண்டு டிச.11ம் தேதி பாரதியாரின் மார்பளவுச் சிலை.
* வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டிய சகோதரர்கள், வ.உ.சி,. ஆகியோருக்கு கடந்த 2023ம் ஆண்டு பிப்.14ம் தேதி சிலைகள்.
* கோவை வ.உ.சி. பூங்காவில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு ரூ.40 லட்சம் செலவிலும், மயிலாடுதுறையில் பெண் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு கடந்த 2023ம் ஆண்டு மே 10ம் தேதி ரூ.15லட்சத்து 97 ஆயிரத்து 669 செலவிலும் புதுக்கோட்டையில் சமூகச்சீர்திருத்த வேங்கை முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு ரூ.9 லட்சத்து 84 ஆயிரத்து 650 செலவிலும் திருவுருவச் சிலைகள்.
* திரைப்படப் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு கடந்த 2023ம் ஆண்டு ஆக.16ம் தேதி ரூ.46லட்சத்து 68,453 செலவில் மதுரையில் திருவுருவச் சிலை.
* சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.21 லட்சத்து 95,799 மதிப்பீட்டில் கடந்த 2023ம் ஆண்டு அக்.15ம் தேதி இந்திய குடியரசு தலைவராக திகழ்ந்த அறிவியல் விஞ்ஞானி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமுக்கு சிலை. .
* சென்னை காந்தி மண்டப வளாகத்தில் திராவிட போரொளி அயோத்திதாச பண்டிதருக்கு கடந்த 2023ம் ஆண்டு டிச.1ம் தேதி ரூ.2 கோடியே 48 லட்சத்து 75,859 மதிப்பீட்டில் திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம்.
* அண்ணா நினைவிட வளாகத்தில் பிப்.26ம் தேதி ”கலைஞர் உலகம்” எனும் அருங்காட்சியகத்துடன் கூடிய கலைஞர் நினைவிடம்
* திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 22,829 மதிப்பீட்டிலும், நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்திற்கு ரூ. 77 லட்சத்து 62,004 மதிப்பீட்டிலும், தமிழ்க் கலை உலகில் ஏழிசை மன்னர் எனப் புகழப்பட்ட எம்.கே.தியாகராஜபாகவதருக்கு ரூ. 79 லட்சத்து 39 ஆயிரத்து 122 மதிப்பீட்டிலும் சிலையுடன் கூடிய மணிமண்டபங்கள்.
* பிப்.27ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் ரூ. 2 கோடியே 17 லட்சத்து 74 ஆயிரத்து 909 மதிப்பீட்டில் திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம், வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் சுதந்திர போராட்ட தியாகி அண்ணல் தங்கோவிற்கு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையையும், ராணிப்பேட்டையில் தமிழறிஞர் மு.வரதராசனாருக்கு ரூ.65 லட்சத்து 76,562 மதிப்பீட்டில் திருவுருவச் சிலையையும், தூத்துக்குடி மாவட்டம், கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில், ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மார்பளவுச் சிலையை மாற்றி ரூ.48 லட்சத்து 66 ஆயிரத்து 383 செலவில் வீரன் சுந்தரலிங்கம் குதிரையில் அமர்ந்து போர் புரிவது போன்ற கம்பீரத் தோற்றத்துடன் கூடிய புதிய சிலை ஆகியவற்றை எல்லாம் முதல்வர் திறந்துவைத்தார்.
தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 10 நினைவரங்கங்கள் 36 சிலைகள் அமைத்துள்ளார். மேலும் பல தியாகிகளுக்குரிய நினைவுச் சின்னங்களையும் அமைத்து வருகிறார். இவை இந்தியாவிற்கே வழிகாட்டத் தக்கவையாகும்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தியாகிகள், சமூக நீதி வேங்கைகள், தமிழ் சான்றோருக்கு சிலைகள் அமைப்பு appeared first on Dinakaran.