×

சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க நிஜ்ஜார் விவகாரத்தை பயன்படுத்தும் பிரதமர் ட்ரூடோ: கனடா எதிர் கட்சி தலைவர் குற்றச்சாட்டு

ஒட்டாவா: சர்ச்சைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக நிஜ்ஜார் விவகாரத்தை பிரதமர் ட்ரூடோ பயன்படுத்திக்கொள்வதாக கனடா எதிர்கட்சி தலைவர் மாக்சிம் பெர்னியர் விமர்சித்துள்ளார். கனடாவில் எதிர்கட்சி தலைவரான மாக்சிம் பெர்னியர் கூறுகையில், ‘‘கடந்த 2023ம் ஆண்டு நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய தூதரக அதிகாரி மற்றும் ஐந்து தூதர்களை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது தொடர்பாக எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. பிரதமர் ட்ரூடோ இந்த நெருக்கடியை மற்ற சர்ச்சைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கு தெளிவாக பயன்படுத்திக்கொள்கிறார். நிஜ்ஜார் ஒரு வெளிநாட்டு தீவிரவாதி . அவர் கனடாவை சேர்ந்தவர் இல்லை. அவரது கனடா குடியுரிமையை பறிக்க வேண்டும்” என்றார்.

The post சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க நிஜ்ஜார் விவகாரத்தை பயன்படுத்தும் பிரதமர் ட்ரூடோ: கனடா எதிர் கட்சி தலைவர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Trudeau ,Nijjar ,Canada ,Ottawa ,Maxim Bernier ,Confrontation ,Dinakaran ,
× RELATED ஆட்சி கவிழும் அபாயம் கனடா பிரதமர்...