×

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பிரகாசம்

வாஷிங்டன்: உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டு கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாஷிங்டன்னில் செய்தியாளர்களை சந்தித்த உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா கூறுகையில், ‘‘உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பிரகாசமாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற சூழலில் ஆறு, ஏழு சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக வளர்ச்சி பெறுவது என்பது இதற்காக அவர்கள் பல விஷயங்களை செய்திருக்கிறார்கள் என்பதை காட்டுகின்றது. உண்மையில் இது சில வழிகளில் ஆரோக்கியமான அறிகுறியாகும்” என்றார்.

The post உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பிரகாசம் appeared first on Dinakaran.

Tags : India ,Washington ,World Bank ,International Monetary Fund ,President ,Ajay Banga ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவுக்கு இந்தியா அதிக வரி...