×
Saravana Stores

பள்ளிகளில் இலவச மதிய உணவு வழங்கும் இந்தோனேஷியா: குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை களைய நடவடிக்கை

இந்தோனேஷியா: உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியா அதனை குறைக்கும் வகையில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தோனேஷியாவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரபுவோ சுபியான்தோ வரும் 20ஆம் தேதி முதல் அதிகார பூர்வமாக தங்கள் பணிகளை துவங்க இருக்கிறார். இந்தோனேஷியாவில் உள்ள 3 குழந்தைகளில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கிறார். இதனை களைய ஊட்டச்சத்து நிறைந்த இலவச மதிய உணவு 8.3 கோடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.

அவரது கனவு திட்டத்தை நிறைவேற்றும் விதமாக சோதனை அடிப்படையில் மேற்கு ஜாவாவில் இருக்கும் சுகவிலில் உள்ள 20 பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. சோறு, வறுத்த காய்கறிகள், வேகவைத்த முட்டை, பால் மற்றும் பழங்கள் ஒவ்வொரு நாளும் 3200 பேருக்கு வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வர இருக்கிறது. 17 ஆயிரம் தீவுகள் இணைந்த ஒரு நாட்டில் 8.3 கோடி குழந்தைகளுக்கு நாள்தோறும் மதிய உணவு என்பது மிக பெரும் சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

The post பள்ளிகளில் இலவச மதிய உணவு வழங்கும் இந்தோனேஷியா: குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை களைய நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Indonesia ,PRABUO SUBIANTO ,PRESIDENT ,
× RELATED இந்தோனேசியா தங்க சுரங்கத்தில் மண்சரிவு: 15 பேர் பலி