×

மாமல்லபுரத்தில் குட்கா விற்ற கடைகளுக்கு சீல்

மாமல்லபுரம், அக்.18: மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக மாமல்லபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கடந்த வாரம் போலீசார் மாமல்லபுரம் மேற்கு ராஜவீதியில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை செய்தனர். அப்போது, 2 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதேபோல், வடகடம்பாடி பகுதியிலும் போலீசார் தீவிர சோதனை செய்ததில், அங்கு 2 மளிகை கடையிலும் குட்கா விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து, விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிந்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் 2 பெட்டி கடைகளுக்கும், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி முன்னிலையிலும், வடகடம்பாடி பகுதியில் மாமல்லபுரம் போலீஸ் எஸ்ஐ திருநாவுக்கரசு முன்னிலையில் 2 மளிகை கடைகளுக்கு திருக்கழுக்குன்றம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரசாத் சீல் வைத்து, 4 கடைகளிலும் 15 நாட்களுக்கு எந்த வியாபாரமும் செய்யக் கூடாது என கடுமையாக எச்சரித்து சென்றனர்.

The post மாமல்லபுரத்தில் குட்கா விற்ற கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Mamallapuram ,Tamil Nadu government ,Mamallapuram West Rajaveedee ,
× RELATED மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும்...