×

காஞ்சி-செங்கையில் தொடர் மழையால் 25 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின

 

காஞ்சிபுரம், அக். 16: தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளநிலையில் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், நேற்று தொடங்கிய மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 909 பொதுப்பணித்துறை ஏரிகளில் 25 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளன.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமன் தண்டலம், இளநகர் சித்தேரி ஆகிய இரண்டு ஏரிகளும். செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம் – கூடுவாஞ்சேரி, திம்மாவரம், ஆத்தூர், குண்டூர், தென்மேல்பாக்கம், வில்லியம்பாக்கம், அச்சரப்பாக்கம், பாக்கம், கொளடாய் ஏரி, மாத்தூர் ஏரி, ஓரத்தூர் ஏரி, கடமலைபதூர் என மொத்தம் 25 ஏரிகள் நிரப்பியுள்ளன. மதுராந்தகம் ஏரி தற்போது ஏரி சீரமைக்க பணி நடைபெற்று வருவதால் நீர் நிரம்ப வில்லை.

The post காஞ்சி-செங்கையில் தொடர் மழையால் 25 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின appeared first on Dinakaran.

Tags : Kanchi-Sengai ,Kanchipuram ,Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Thiruvallur Chengalpattu ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில...