மாமல்லபுரம், அக்.16: மாமல்லபுரம் உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.இங்குள்ள, புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர்.அப்படி, வருபவர்கள் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வளைதலத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை முதல் மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கன மழை பெய்தது.
இதனால், கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை மற்றும் புலிக்குகை ஆகிய புராதன சின்னங்கள் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.மேலும், காலை முதல் மாலை வரை மாமல்லபுரத்துக்கு விரல் விட்டு எண்ணும் அளவில் சுற்றுலா வாகனங்கள் வருகை தந்ததை காண முடிந்தது. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் கிராமம் முதல் கோவளம் வரை கடல் சீற்றமாக காணப்படுவதால், மாமல்லபுரம் உள்ளிட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
The post சுற்றுலா பயணிகள் இன்றி மாமல்லபுரம் வெறிச்சோடியது appeared first on Dinakaran.