ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் 6 பேர் வரை உயிரிழந்தனர்.. இபிஎஸ் மறக்கக் கூடாது :திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை : சென்னையில் துரதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வது சரியல்ல என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியில் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,”வான்சாகச நிகழ்ச்சியை காணவந்த 5 பேர் பலியான விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.5 பேர் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பான அறிக்கையே இன்னும் வரவில்லை.

ஜெயலலிதா தூங்கியதால் அதிமுக ஆட்சியில் 2015-ல் சென்னையே வெள்ளத்தில் மிதந்தது.கும்பகோணம் மகாமகத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்களே. ஜெயலலிதா பங்கேற்றபோது நிகழ்ந்த இறப்புகளை இபிஎஸ் மறக்கக் கூடாது; ஜெயலலிதாவின் மதுரை தேர்தல் பிரசாரத்தின்போது கூட்டத்தில் சிக்கி 6 பேர் இறந்தனர். சென்னையில் துரதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வது சரியல்ல. மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து தரப்பட்டது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் 6 பேர் வரை உயிரிழந்தனர்.. இபிஎஸ் மறக்கக் கூடாது :திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: