தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், அரியலூர், நாமக்கல், நாகப்பட்டினம், தூத்துக்குடி தென்காசி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, கடலூர், கோவை, புதுக்கோட்டை, திருவாரூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது .

கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் மிக பலத்த மழையும், தென் மாவட்டங்களில் பரவலாகவும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் பகலில் வெயில் அதிகமாகவும் மாலை வேளையில் குளிர்ச்சியான சூழல் நிலவி நகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை அல்லது கனமழை பெய்யும்.

சென்னை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், அரியலூர், நாமக்கல், நாகப்பட்டினம், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய மழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

 

 

The post தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: