மேற்கண்டவாறு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வுகளுக்கான முடிவுகள் 20.09.2024 அன்று வெளியிடப்பட்டு, பட்டப்படிப்பு தகுதி நிலை பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு 07.10.2024 முதல் 18.10.2024 வரை நேர்முகத்தேர்வு நடத்தவும், பட்டயப்படிப்பு தகுதி நிலை பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு 21.10.2024 முதல் 14.11.2024 வரை நேர்முகத்தேர்வு நடத்தவும் உத்தேசிக்கப்பட்டு, அதற்கான அழைப்புக் கடிதங்களும் //tnmaws.ucanapply.com என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில், 21.10.2024 அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நடத்தும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டிய நாளில், இத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டிய நபர்கள் எவரேனும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணித்தேர்வு அல்லது வேறு ஏதேனும் ஒன்றிய அரசு (அ) தமிழ்நாடு அரசு நடத்தும் எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய நிலை இருந்தால், அத்தகைய நபர்களின் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் மாற்றுத் தேதியில் நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நேர்முகத் தேர்வு நடத்தும் நாள்களில் வேறு ஏதேனும் ஒன்றிய அரசு அல்லது தமிழ்நாடு அரசு நடத்தும் எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் நபர்கள் இத்தேர்வுக்கான (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) பதிவு எண்ணுடன் (Register Number), தாங்கள் கலந்து கொள்ளும் பிற எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களுடன் dmamaws2024@gmail.com மின்னஞ்சல் முகவரியில், இந்நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள மாற்று தேதி கோரி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேர்வுக்குழு பணிநியமனம் – 2024 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
The post நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.