எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவை வழங்கவும், வங்கியின் டிஜிட்டல் சேவையை மேம்படுத்துவதை இலக்காக நிர்ணயித்துள்ளது. எனவே எஸ்பிஐ வங்கி தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதற்கு அதிகம் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்பத் துறையிலும், பொது வங்கி சேவை பிரிவிலும் புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் பணியாற்றுவர்கள் என தெரிவித்துள்ளது. அதாவது ஆரம்ப நிலை மற்றும் உயர் மட்டத்திலும் சுமார் 1,500 தொழில்நுட்பப் பணியாளர்களை பணியில் சேர்க்க உள்ளதாகவும் எஸ்பிஐ வங்கியின் தலைவர் சி.எஸ்.செட்டி சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்நுட்ப பிரிவில் scientists, data architects, network operators உள்ளிட்ட சிறப்புப் பணிகளில் ஊழியர்களை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மொத்தத்தில் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த ஆண்டு 8,000 பேர் புதிதாக சேர்க்கப்படுவார்கள் என்றும், மொத்தமாக சிறப்பு மற்றும் பொதுப்பிரிவு சேர்த்து 10,000 பேர் பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி வங்கியின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,32,296 ஆக இருந்தது. இதில், கடந்த நிதியாண்டின் இறுதியில் 1,10,116 அதிகாரிகள் வங்கியின் பட்டியலில் இருந்தனர்.
வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஊழியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்றும், இது தொடர் செயல்முறை என்றும் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகின்றன. அதற்கு ஏற்ப தொழில்நுட்பமும் மாறுகிறது. டிஜிட்டல் மயமாக்கல் என்பது பொதுவாக அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது. தொடர்ந்து அனைத்து மட்டங்களிலும் ஊழியர்களை மறுசீரமைத்து வருகிறோம் வங்கியின் தலைவர் செட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
The post வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க முடிவு: 10,000 புதிய ஊழியர்களை நியமிக்க உள்ளதாக எஸ்பிஐ அறிவிப்பு!! appeared first on Dinakaran.