×
Saravana Stores

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர், அக்.4: 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் நேற்று சர்வதேச நடவடிக்கைகள் தின ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்றோர் சங்க நிர்வாகிகள் செளந்திரபாண்டியன், பழனிவேல்சாமி, கல்யாணராமன், சண்முகசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊதிய குறைப்பு இன்றி வாரத்திற்கு 35 மணி நேர பணி வழங்க வேண்டும், பணி இடங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும், சமூக பாதுகாப்புகளை உறுதி செய்வதோடு உலகளாவிய முறையிலான பொதுநலம் மற்றும் கல்வி வழங்க வேண்டும். தரமான பணியிட மற்றும் வாழ்க்கை சூழ்நிலை ஆகிய கோரிக்கைகளை வைத்து முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

The post 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : BSNL ,Tirupur ,BSNL Employees' Association ,International Action Day ,Tirupur BSNL Head Office ,Viswanathan ,Chelandrapandian ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற 2 பேர் கைது