×

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

1.வெள்ளை காராமணி இனிப்பு சுண்டல்

தேவையானவை:

ஊறவைத்து வேகவைத்த வெள்ளை காராமணி – 1 கப்,
வெல்லம் – ½ கப்,
நெய் – 2 டீஸ்பூன்,
ஏலக்காய்தூள் – ¼ டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கெட்டிப் பாகு காய்ச்சவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய்யை சூடாக்கி வெந்த காராமணியைச் சேர்க்கவும். கூடவே காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய் துருவல் தூவி இறக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுண்டல் இது.

2.கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

தேவையானவை:

கறுப்புக் கொண்டைக்கடலை – 1 கப்,
சோம்பு – ¼ டீஸ்பூன்,
பட்டை – சிறு துண்டு,
கிராம்பு, ஏலக்காய் – தலா 2,
புதினா – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 3,
தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கொண்டைக்கடலையை சுமார் 6 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைக்கவும். வெந்த கடலையில் உள்ள தண்ணீரை வடித்து விடவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். வதங்கியப் பின் வெந்தக் கடலை, தேவையான உப்பு சேர்த்து கிளறி, தேங்காய் தூவி இறக்கினால் மசாலா சுண்டல் தயார்.

3.பீச் சுண்டல்

தேவையானவை:

ஊறவைத்து வேக வைத்த பட்டாணி – 1 கப்,
பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகள் – 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் விழுது – 1 டீஸ்பூன்,
கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு – தலா ¼ டீஸ்பூன்,
இஞ்சி துருவல் – ¼ டீஸ்பூன்,
பெருங்காயதூள் – ¼ டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சைமிளகாய் விழுது, இஞ்சி துருவல், மாங்காய் துண்டுகள் சேர்த்து தாளிக்கவும். பின் நன்றாக வதங்கியதும் வெந்த பட்டாணி, உப்பு சேர்த்து நன்கு கலக்கி தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் சுவையான பீச் சுண்டல் தயார்.

4.சாபுதானா சுண்டல்

தேவையானவை:

ஜவ்வரிசி – 1 கப்,
முளைக்கட்டிய பயறு – ¾ கப்,
கீறிய பச்சை மிளகாய் – 2,
இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன்,
கேரட் – 1 (துருவியது),
நெய் – 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

ஜவ்வரிசியை 1 மணி நேரம் (அ) மிருதுவாகும் வரை ஊறவைக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி பச்சை மிளகாய், இஞ்சி துருவல், ஊறவைத்த ஜவ்வரிசி, வேகவைத்த முளைக்கட்டிய பயறு, உப்பு சேர்த்து கிளறவும். பின் துருவிய கேரட், கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல் தூவிக் கிளறி இறக்கவும்.

5.பாசிப்பருப்பு சுண்டல்

தேவையானவை:

பாசிப்பருப்பு – 1 கப்,
கீறிய பச்சைமிளகாய் – 2,
இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காய தூள் – தலா ¼ டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து 1 மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி துருவல், பெருங்காயத்தூள் தாளித்து வேகவைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து கிளறி, தேங்காய் துருவல் தூவி இறக்கினால் சுவையான ‘பாசிப்பருப்பு சுண்டல்’ ரெடி.

6.ராஜ்மா (கிட்னி பீன்ஸ்) கட்டா மிட்டா சுண்டல்

தேவையானவை:

கறுப்பு ராஜ்மா – 1 கப் (ஊறவைத்து வேக வைத்தது),
பச்சை மிளகாய் 3 (கீறியது),
வெல்லம் – ஒரு சிறு துண்டு,
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிது,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,
கடுகு, சீரகம் – தலா ¼ டீஸ்பூன்.

செய்முறை:

வாண லியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின் வெந்த ராஜ்மா, உப்பு சேர்க்கவும். வெல்லத்தை சிறிது நீரில் கெட்டியாக கரைத்து வடிகட்டி ராஜ்மாவுடன் சேர்க்கவும். நன்கு கலந்தவுடன் கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கி எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கினால் புளிப்பும், இனிப்பும் கலந்த ‘கட்டா மிட்டா’ சுண்டல் ரெடி.

7.மிக்ஸடு வெஜ் சுண்டல்

தேவையானவை:

முளைக்கட்டிய ஏதேனும் பயறு – 1 கப்,
கேரட் – 1 (துருவியது),
வெள்ளரி துண்டுகள் – ¼ கப்,
வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் – ¼ கப்,
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது),
பச்சைமிளகாய் விழுது 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிது, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முளைக்கட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கறிவேப்பிலை தாளித்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் ஆவியில் வேகவைத்த பயறு, உப்பு, பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். சத்து மிகுந்த ‘வெஜ் சுண்டல்’ ரெடி.

8.நவதானிய சுண்டல்

தேவையானவை:

வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக் கடலை, காராமணி, பாசிப்பயறு, கொள்ளு, மொச்சை, சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி (அனைத்தும் முளைக்கட்டியது) – தலா 4 டேபிள் ஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ½ டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

அரைக்க:

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
சோம்பு – ¼ டீஸ்பூன்,
பட்டை – 1 சிறிய
துண்டு, இஞ்சி – 1 சிறிய துண்டு.

செய்முறை:

முளைக்கட்டிய தானியங்கள் அனைத்தையும் வேகவைத்து இறக்கவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். பின் வெந்த தானியம், உப்பு சேர்த்துக் கிளறி, அரைத்த விழுதும் சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனைப் போனதும் இறக்கினால் ‘நவதானிய சுண்டல்’ தயார்.

9.சிவப்பு சோயா சுண்டல்

தேவையானவை:

உரித்த சிவப்பு சோயா – 1 கப் (வேகவைத்தது),
இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய் – 2,
கரம் மசாலா – 1 டீஸ்பூன்,
பட்டை – 1 சிறு துண்டு,
சோம்பு – ¼ டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, பச்சைமிளகாய் தாளித்து, இஞ்சி துருவல், வெந்த சோயாபீன்ஸ் சேர்த்து வதக்கவும். கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

10.பட்டாணி வேர்க்கடலை சுண்டல்

தேவையானவை:

வெந்த பட்டாணி, வெந்த வேர்க்கடலை – தலா 1 கப்,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி தழை – சிறிதளவு,
சீரகம் – ¼ டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

பொடிக்க:

காய்ந்த மிளகாய் 3,
பட்டை – ஒரு சிறிய துண்டு,
ஏலக்காய், கிராம்பு – தலா 2,
சோம்பு – ¼ டீஸ்பூன்.

செய்முறை:

பொடிக்க வேண்டியவைகளை வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் தாளித்து, புதினா, கொத்தமல்லி தழை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த பட்டாணி, வேர்க்கடலை, உப்பு, வறுத்தப் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். விருப்பப்பட்டால் தேங்காய் துருவல், வறுத்த எள்ளுப் பொடி சேர்த்தும் சுண்டல் செய்யலாம்.

11.பாஸ்தா சுண்டல்

தேவையானவை:

பாஸ்தா – 1 கப்,
கறுப்பு சென்னா – 1 கப்,
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
தேங்காய் துருவல் – அரை கப்,
பெருங்காயப் பொடி – சிறிதளவு,
இட்லி பொடி – காரத்திற்கு ஏற்ப.

செய்முறை:

முதல் நாள் இரவே கறுப்பு சென்னாவை ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரை வேகவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் தண்ணீர், உப்பு சேர்த்து பாஸ்தாவினை வேகவைத்து அதையும் வடித்து தனியே வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதி

The post நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED ப்ளம் கேக்