தேவையானவை:
மைதா மாவு – 250 கிராம்,
வெண்ணெய் – 250 கிராம்,
சர்க்கரை தூள் – 250 கிராம்,
பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா – 1½ டீஸ்பூன்,
திராட்சை – 1 கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் சோடா, ஆப்பசோடா மூன்றையும் சலித்துக் கொள்ளவும். வெண்ணெயைக் கிரீம் போல் அடித்துக் கொள்ளவும். அடித்த வெண்ணெயுடன் சர்க்கரை பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அடித்துக் கொண்டே மைதா கலவையும் சேர்த்துக் கலக்கவும். பிறகு கேக் கலவையில் திராட்சையும் சேர்த்து தகர ட்ரெயில் ஊற்றி அடுப்பில் ஏற்ற வேண்டும். சிறு தீயில் 1 மணி நேரம் வேகவைக்கவும். வெந்தபின் இறக்கி கட் செய்து பரிமாறவும்.
The post திராட்சை கேக் appeared first on Dinakaran.