×

ப்ளம் கேக்

தேவையானவை:

மைதா – 100 கிராம்,
வெண்ணெய் – 100 கிராம்,
ஓமதூள் – ½ டீஸ்பூன்,
சர்க்கரை – 100 கிராம்,
திராட்சை – 30 கிராம்,
முந்திரி, பிஸ்தா,
வால்நெட் – 40 கிராம்,
சுக்குதூள் – ½ ஸ்பூன்,
சோளமாவு – 2 ஸ்பூன்,
பால் – ¼ கப்,
முட்டை – 3,
செர்ரி பழம் – 50.

செய்முறை:

முதலில் சோளமாவை பாலில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கூழாக வேகவைக்கவும். கலவைக் கட்டித் தட்டாமல் இருக்க வேண்டும். கேக் டின்னில் பட்டர் பேப்பர் போட்டு பரப்பி விட்டு டின்னுக்கு வெளியே இருக்கும்படி இழுத்து விடவும். மைதாவை பொடித்த சர்க்கரை, சுக்குத்தூள் மற்றும் ஓமத்தூளுடன் சேர்த்து சலித்துக் ெகாள்ளவும். அதில் உருக்கிய வெண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். எக் பீட்டரில் முட்டையைப் போட்டு நுரைப் பொங்க அடித்து, இந்த கலவையோடு அனைத்து உலர்ந்த பழங்களை சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். பட்டர் பேப்பர் தடவிய கேக் டின்னில் கேக் கலவையை பாதி ஊற்றவும். அதன் மீது துண்டுகளாக நறுக்கிய செர்ரிப் பழங்களை போட்டு அதன் மீது மீதிக் கலவையை ஊற்றவும். இதை மிதமான சூட்டில் ஓவனில் 40 நிமிடம் வைத்து எடுக்கவும்.

The post ப்ளம் கேக் appeared first on Dinakaran.

Tags :
× RELATED திராட்சை கேக்