தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 1/2 கப்
பார்லி அரிசி – 1/2 கப்
பெரிய தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 6 பல்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிது (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
சாம்பார் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – 6 கப்
தாளிப்பதற்கு
நெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – சிறிது
முந்திரி – 10
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
முதலில் 1/2 கப் பார்லி அரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரில் 1/2 கப் பாசிப் பருப்பை எடுத்து, அதில் ஊற வைத்துள்ள பார்லியை நீருடன் ஊற்றி நன்கு கைகளால் பிசைந்து, நீரை வடிகட்டிவிட்டு, மீண்டும் நீரில் 2 முறை அலசி நீரை முற்றிலும் வடித்து விட வேண்டும். பின்பு அத்துடன் நறுக்கிய வெங்காயம், கேரட், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி சாம்பார் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 6 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 6 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு நன்கு மசித்து விட வேண்டும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, பெருங்காயத் தூள், முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கிச்சடியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பார்லி கிச்சடி தயார்.
The post பார்லி கிச்சடி appeared first on Dinakaran.